வாலிபர் தீக்குளிக்க முயற்சி


வாலிபர் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 11 Oct 2022 12:15 AM IST (Updated: 11 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டை அருகே வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது

தென்காசி

சுரண்டை:

சுரண்டை அருகே பொய்கை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லச்சாமி மகன் வசந்த் (வயது 19). லாரி கிளீனர். இவருடைய வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் அவரது இடம் எனக்கூறி கம்பி வேலி போட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வசந்த் குடும்பத்தினர் நடைபாதை இல்லாமல் சிரமப்பட்டு வந்துள்ளனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நடைபாதை வேண்டும் என பல்வேறு இடங்களில் புகார் மனு வழங்கியுள்ளார். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று மாலை வசந்த் தனது வீட்டின் அருகே திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அக்கம்பக்கத்தினர் மற்றும் போலீசார் தண்ணீர் ஊற்றி அவரை காப்பாற்றினர். இது தொடர்பாக பொய்கை கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் மீதும், வசந்த் மீதும் சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story