ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை


ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 2 Oct 2023 12:15 AM IST (Updated: 2 Oct 2023 11:05 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து ெகாண்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி கால்டுவெல் காலனி 3-வது தெருவை சேர்ந்தவர் கணேஷ். இவர் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், சென்னை வியாசர்பாடியை சேர்ந்த தங்கதுரை மகள் சுஜாதா (வயது 30) என்பவருக்கும் கடந்த 9.9.22 அன்று திருமணம் நடந்தது. சுஜாதா தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் இரவும் தகராறு ஏற்பட்டது. இதனால் கணவன், மனைவி தனித்தனி அறையில் படுத்து தூங்கியதாக கூறப்படுகிறது.

நேற்று காலையில் நீண்ட நேரம் ஆகியும் சுஜாதா கதவை திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்து உள்ளனர். அப்போது அங்கு சுஜாதா தூக்குப்போட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவல் அறிந்த தென்பாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்தனர். திருமணமாகி ஓராண்டு மட்டுமே ஆவதால், தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story