ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை


ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை
x

விக்கிரமசிங்கபுரம் அருகே கடன் தொல்லையால் ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் அருகே கடன் தொல்லையால் ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஆசிரியர்

நெல்லையை அடுத்த பழைய பேட்டை காந்திநகர் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 51). இவர் முக்கூடலில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இவர் தன்னுடன் பணியாற்றும் ஆசிரியருக்காக மற்றொருவரிடம் இருந்து கடன் வாங்கி கொடுத்தார். பின்னர் அந்த ஆசிரியர் கடனை திருப்பி செலுத்தாததால், கடன் வழங்கியவர் பணத்தை திருப்பி தருமாறு சுப்பிரமணியனிடம் அடிக்கடி கேட்டு வந்தார்.

தற்கொலை

இதனால் மனமுடைந்த சுப்பிரமணியன் சம்பவத்தன்று விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரத்தில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சென்று பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார்.

உடனே அவருக்கு அம்பை அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரமசிங்கபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விக்கிரமசிங்கபுரம் அருகே கடன் தொல்லையால் ஆசிரியர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story