விபத்தில் டீக்கடைக்காரர் சாவு


விபத்தில் டீக்கடைக்காரர் சாவு
x

பர்கூரில் விபத்தில் டீக்கடைக்காரர் இறந்தார்.

கிருஷ்ணகிரி

பர்கூர்

கந்திக்குப்பம் அடுத்த பாலிநாயனப்பள்ளியை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 36). இவர்,கிருஷ்ணகிரியில் டீக்கடை வைத்துள்ளார். நேற்று காலை இவர் மொபட்டில் கிருஷ்ணகிரிக்கு புறப்பட்டார். ஒரப்பம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது பின்னால் வந்த கார் மோதி சென்றது. இதில், நிலைதடுமாறி விழுந்த முனிராஜ் மீது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி ஏறியது. விபத்தில் உடல் நசுங்கி முனிராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். கந்திக்குப்பம் போலீசார் முனிராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


Next Story