பாணாவரம் செல்லும் தார் சாலையை சீரமைக்க வேண்டும்-கர்ணாவூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜீ.செல்வி ஜீவா
வேடந்தாங்கலில் இருந்து கூத்தம்பாக்கம் வழியாக பாணாவரம் செல்லும் தார் சாலையை சீரமைக்க வேண்டும் என்று கர்ணாவூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜீ.செல்வி ஜீவா கோரிக்கை வைத்துள்ளார்.
வேடந்தாங்கலில் இருந்து கூத்தம்பாக்கம் வழியாக பாணாவரம் செல்லும் தார் சாலையை சீரமைக்க வேண்டும் என்று கர்ணாவூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜீ.செல்வி ஜீவா கோரிக்கை வைத்துள்ளார்.
கர்ணாவூர் ஊராட்சி மன்றம்
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் கர்ணாவூர் ஊராட்சி மன்றம் உள்ளது. இதில் கர்ணாவூர், வேடந்தாங்கல், குப்புக்கல்மேடு, வெடல்வாடி, பழைய வேடந்தாங்கல் ஆகிய குக்கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சி மன்ற தலைவராக அதே பகுதியை சேர்ந்த ஜீ.செல்வி ஜீவா உள்ளார். ஊராட்சியில் செய்யப்பட்டுள்ள வளர்ச்சி பணிகள் குறித்து அவர் கூறியதாவது:-
வேடந்தாங்கல், திடீர் நகரில் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்திலும், பழைய வேடந்தாங்கலில் ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்திலும், குப்புக்கல்மேடு ரோட்டு தெரு, பெரியார் நகரில் ரூ.2 லட்சத்தில் பைப்லைன், வேடந்தாங்கல் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.10 லட்சத்து 75 ஆயிரத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
கர்ணாவூர் அருந்ததிபாளையத்தில் ரூ.2 லட்சத்திலும், ரோட்டு தெருவில் ரூ.2 லட்சத்து 12 ஆயிரத்திலும், வெடல்வாடி அருந்ததி பாளையத்தில் ரூ.3 லட்சத்தில் ஆழ்துளை கிணறுகள், மின்மோட்டார், பைப்லைன், கர்ணாவூர் வடவாண்டை தெருவில் மேற்கு புறத்தில் ரூ.3 லட்சத்து 85 ஆயிரத்திலும், வேடந்தாங்கல் பஜனை கோவில் பின்புறம் ரூ.4 லட்சத்து 58 ஆயிரத்தில் கழிவு நீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கொளக்காத்தம்மன் கோவில் அருகிலும், வேடந்தாங்கல் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், குப்புகல்மேடு சுடுகாடு அருகில் உள்ள ஆழ்துளை கிணறுகளிலும் தலா ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தில் புதிய மின் மோட்டார், வேடந்தாங்கல் வடக்கு பாட்டை தெருவில் ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்தில் மின்மோட்டார், குப்புகல்மேடு, பெரியார் நகர் முதல் தெரு, இரண்டாவது தெருவில் தலா ரூ.4 லட்சத்து 53 ஆயிரத்தில் சிமெண்டு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நெற்களம்
மேலும் கர்ணாவூரில் ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்தில் முருங்கை நர்சரி, குப்புகல்மேட்டில் ரூ.7 லட்சத்து 72 ஆயிரத்தில் நெற்களம், கர்ணாவூர் நாககுளம் ரூ.10 லட்சத்து 80 ஆயிரத்தில் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
கர்ணாவூர் காமாட்சி அம்மன் நகரில் ரூ.9 லட்சத்து 58 ஆயிரத்தில் ஒரடுக்கு ஜல்லி சாலை, வேடந்தாங்கலில் ரூ.5 லட்சத்து 17 ஆயிரத்தில் மகளிர் கழிப்பிடம் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. குப்புகல்மேடு, அருந்ததி பாளையத்தில் ரூ.4 லட்சத்து 49 ஆயிரத்தில் சிமெண்டு சாலை, கர்ணாவூர் வடவாண்டை தெருவில் கிழக்கு புறம் ரூ.4 லட்சத்து 34 ஆயிரத்தில் கழிவுநீர் கால்வாய், வேடந்தாங்கலில் ரூ.8 லட்சத்து 22 ஆயிரத்திலும், பாட்டை தெருவில் ரூ.23 லட்சத்து 49 ஆயிரத்திலும், கர்ணாவூர் சுடுகாட்டில் இருந்து பிள்ளையார் கோவில் வரை ரூ.16 லட்சத்து 44 ஆயிரத்தில் ஒரடுக்கு ஜல்லி சாலைகள், கர்ணாவூரில் இருந்து மகேந்திரவாடி செல்லும் வழியில் உள்ள குளம் ரூ.3 லட்சத்து 88 ஆயிரத்தில் தூர் வாருதல் உள்ளிட்ட பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. விரைவில் அந்த பணிகள் தொடங்கப்பட உள்ளது.
நீர்த்தேக்க தொட்டி
பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் மூலம் 7 பயனாளிகளுக்கு இலவச வீடுகள் வழங்கப்பட்டு உள்ளன. பனை விதைகள், மரக்கன்றுகளும் நடப்பட்டு உள்ளன. கர்ணாவூர் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை, சமுதாயக்கூடம், உடற்பயிற்சி கூடம், விளையாட்டு மைதானம், 2 காரியமேடை, 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க வலியுறுத்தியுள்ளேன்.
வேடந்தாங்கலில் இருந்து கூத்தம்பாக்கம் வழியாக பாணாவரம் செல்லும் தார் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் அந்த சாலையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தியும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
பிளாஸ்டிக் ஒழிப்பு, போதைப்பொருள் தடுப்பு, கழிப்பிடத்தின் அவசியம், பெண் குழந்தை பாதுகாப்பு அவசியம் குறித்து ஊராட்சியில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய தட்டி போர்டுகள் மூலமாகவும், துண்டு பிரசுரங்கள் வினியோகம் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
குறைகள் கேட்பு
நான் தினமும் காலையில் ஊராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் நேரடியாக சென்று வார்டு பகுதிகளில் அடிப்படை குறைகள் உள்ளதா என்று பார்த்து வருவேன். அப்போது மக்கள் தெரிவிக்கும் குறைகளை பொறுமையாக கேட்டு அதை உடனுக்குடன் சரிசெய்து கொடுத்து வருகிறேன். மக்கள் குறைகளை தெரிவிப்பதற்கு முன்பாக அந்த குறையை நான் அறிந்து அதை சரிசெய்து கொடுத்து வருகிறேன்.
வார்டு பகுதிகளில் குப்பைகள் சரியாக அள்ளப்படுகிறதா, குடிநீர் தடையில்லாமல் வழங்கப்படுகிறதா என்று பார்த்து ஆய்வு செய்வேன். தடையில்லாமல் குடிநீர் கிடைக்க கூடுதல் ஆழ்துளை கிணறுகள் அமைக்கவும், குடிநீர் குழாய்கள் இல்லாத பகுதிகளில் புதிய குழாய்கள் அமைக்கவும், மின் விளக்குகள் இல்லாத பகுதிகளில் புதிய மின் விளக்குகள் பொருத்தவும், பழுதடைந்த மின் விளக்குகளை உடனுக்குடன் மாற்றவும் நடவடிக்கை எடுத்து உள்ளேன்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கர்ணாவூர் ஊராட்சியை முதன்மையான சிறந்த ஊராட்சியாக மாற்ற ஒன்றிய கவுன்சிலர் கோமதி குமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் இ.பாலாஜி, வார்டு உறுப்பினர்கள் புஷ்பாவதி சேட்டு, கே. ஜெய்கணேஷ், சூரியா விஜயகுமார், அஞ்சாலட்சுமி மனோகர், வசந்தா வீராசாமி, ஜி.அண்ணாதுரை, ஜெகதா முனியாண்டி, ஜி.முருகன், ஊராட்சி செயலாளர் பி.ரகு ஆகியோருடன் இணைந்து செயல்பட்டு வருகிறேன்.
இவ்வாறு ஊராட்சி மன்ற தலைவர் ஜீ.செல்வி ஜீவா தெரிவித்து உள்ளார்.