டேங்கர் லாரியில் விரிசல் ஏற்பட்டு சாலையில் மெத்தனால் கொட்டியது


டேங்கர் லாரியில் விரிசல் ஏற்பட்டு சாலையில் மெத்தனால் கொட்டியது
x
தினத்தந்தி 2 March 2023 6:45 PM (Updated: 2 March 2023 6:45 PM)
t-max-icont-min-icon

கூடலூரில் மற்றொரு லாரியை கடந்து செல்ல முயன்றபோது டேங்கர் லாரியில் விரிசல் ஏற்பட்டு சாலையில் மெத்தனால் கொட்டியது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

நீலகிரி

கூடலூர்

கூடலூரில் மற்றொரு லாரியை கடந்து செல்ல முயன்றபோது டேங்கர் லாரியில் விரிசல் ஏற்பட்டு சாலையில் மெத்தனால் கொட்டியது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

டேங்கர் லாரி

கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு அத்தியாவசிய பொருட்கள் சரக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. இதேபோன்று கேரளாவில் உள்ள துறைமுகங்களில் இருந்து கூடலூர் வழியாக சரக்கு லாரிகளில் கர்நாடகாவுக்கு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை 9 மணிக்கு கேரள மாநிலம் கொச்சியில் இருந்து மெத்தனால் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று கூடலூர் வழியாக கர்நாடகா நோக்கி சென்று கொண்டு இருந்தது.

மூச்சுத்திணறல்

பள்ளிப்பாடி பகுதியில் வந்தபோது எதிரே மற்றொரு லாரி சென்றது. பின்னர் 2 லாரிகளும் கடந்து செல்ல முயன்றபோது, ஒன்றோடொன்று உரசிக்கொண்டன. அதில், டேங்கர் லாரியின் ஒரு பகுதியில் விரிசல் ஏற்பட்டது. இதனால் மெத்தனால் வெளியேறி சாலையில் கொட்டியது. மேலும் மெத்தனால் நெடி பரவ தொடங்கியது.

இதனால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

தண்ணீரை பீய்ச்சியடித்தனர்

இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) சங்கர் தலைமையிலான வீரர்கள் டேங்கர் லாரியை சாலையோரத்துக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து தீ பிடித்து விடாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லாரி முழுவதும் தண்ணீரை பீச்சியடித்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


Next Story