தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நிறைவடைகிறது..!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நிறைவடைகிறது.
சென்னை,
கடந்த 9-ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நிறைவடைகிறது. சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்வின்போது வேளாண் மண்டலத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தையும் சேர்க்கும் வகையில், வேளாண் மண்டல திருத்த சட்ட முன் வடிவு தாக்கல் ஆகிறது. இந்த சட்ட முன்வடிவை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
அதைபோல தமிழ்நாட்டில் ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்துவது தொடர்பான சட்ட முன் வடிவும் இன்று தாக்கல் ஆகிறது. ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தும் சட்ட முன்வடிவை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தாக்கல் செய்கிறார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாடுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.