தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை தமிழக அரசே அகற்ற முடிவு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியை தமிழக அரசே செய்ய முடிவு செய்துள்ளது.
சென்னை,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியை தமிழக அரசே செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக துணை ஆட்சியர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆலை கழிவுகளை அகற்றுவதற்கான செலவை ஸ்டெர்லைட் நிர்வாகமே ஏற்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செயலற்ற இயந்திரங்களை அகற்ற, மூலப்பொருட்கள், உதிரிபாகங்களை ஆலைக்கு வெளியே கொண்டு செல்ல, ஆலை பாதுகாப்பை ஆய்வு மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story