மழையினால் சேறும், சகதியாக மாறிய தாலுகா அலுவலக வளாகம்


மழையினால் சேறும், சகதியாக மாறிய தாலுகா அலுவலக வளாகம்
x

திருவண்ணாமலையில் தாலுகா அலுவலக வளாகம் மழையினால் சேறும், சகதியாக காட்சி அளித்தது.

திருவண்ணாமலை


திருவண்ணாமலையில் தாலுகா அலுவலக வளாகம் மழையினால் சேறும், சகதியாக காட்சி அளித்தது.

கூவமாக மாறியது

திருவண்ணாமலை மாவட்டமாக பிரிக்கப்பட்ட போது மாவட்ட கலெக்டர் அலுவலகமாக செயல்பட்ட கட்டிடத்தில் தற்போது திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த தாலுகா அலுவலக வளாகத்தில் சார் கருவூலம், திருவண்ணாமலை கிராம நிர்வாக அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

திருவண்ணாமலையில் ஒரு மணி நேரம் மழை பெய்தாலே தாலுகா அலுவலகத்தில் உள்ள சார் கருவூலம், திருவண்ணாமலை கிராம நிர்வாக அலுவலகம், உள்ள ஒரு பகுதி கூவம் போல் காட்சியளிப்பது வாடிக்கையான ஒன்றாகி விட்டது.

பலர் போராட்டங்கள் நடத்தியும் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் போராட்டம் நடத்தியவர்களும் சேர்ந்து போய் விட்டனர்.

இந்த நிலையில் நேற்று பெய்த மழையினால் அந்த பகுதி மீண்டும் சேறும், சகதியாக மாறி கூவம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் தாலுகா அலுவலகத்திற்கு வந்து செல்லும் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் சிமெண்டு சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பாதுகாப்பு உபகரணங்கள்

அதேபோல் திருவண்ணாமலை மாட வீதியில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு காந்தி சிலை அருகில் கழிவுநீர் இன்று மதியம் வரை பெருக்கெடுத்து ஓடியது. பாதாள சாக்கடையில் உள்ள அடைப்பை சீர் செய்யும் பணியில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் பணியில் ஈடுபட்டனர். இதை கண்டு பொதுமக்கள் வேதனை அடைந்தனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாதாள சாக்கடை அடைப்பு சீர் செய்வது போன்ற பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story