காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்


காங்கிரஸ் கட்சியினர்  போராட்டம்
x

தென்காசியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி

தென்காசி:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று வாயில் வெள்ளை துணியை கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தினர்.

மாவட்ட தலைவர் பழனி நாடார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் உதய கிருஷ்ணன், சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன், தென்காசி நகர தலைவர் காதர் முகைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.




Next Story