கோவிலுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
கழுகுமலை அருகே கோவிலுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது.
தூத்துக்குடி
நாலாட்டின்புத்தூர்:
கழுகுமலை இந்திரபிரஸ்தம் தெருவில் பிரசித்தி பெற்ற ஆதிபராசக்தி அனந்தம்மன் கோவில் உள்ளது. தற்போது கோவிலில் சித்திரை பெருவிழா நடந்து வருகிறது. நேற்று கோவில் வளாகத்தில் உள்ள உண்டியல் அருகே பாம்பு ஒன்று பதுங்கி கிடப்பதை கோயில் பணியாளர்கள் பார்த்தனர். உடனடியாக கோவில் ஆதீன குரு திருமால் சுவாமிஜி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் லிங்கதுரை தலைமையில் மீட்பு குழுவினர் வந்து கோவிலில் பதுங்கி இருந்த சுமார் 10 அடி நீளமுள்ள சாரை பாம்பை லாவகமாக பிடித்தனர். இந்த பாம்பு காட்டு சாரை என்கிற வகையை சேர்ந்ததாகும். தொடர்ந்து தீயணைப்பு துறையினர் சாரை பாம்பை அடந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டு விட்டனர்.
Related Tags :
Next Story