பாம்பு கடித்து சிறுவன் பலி


பாம்பு கடித்து சிறுவன் பலி
x

பாம்பு கடித்து சிறுவன் பலியானான்.

சேலம்

கெங்கவல்லி:

கெங்கவல்லி அருகே உள்ள சாத்தப்பாடியை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மகன் சபரீசன் (வயது 6). தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மதியம் ஒரு மணி அளவில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென்று மயங்கி விழுந்தான். உடனே பெற்றோர்கள், உறவினர்கள் ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது, சிறுவனை பாம்பு கடித்தது தெரியவந்தது. டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் சபரீசன் பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story