பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய சமயபுரம் ஆட்டுச்சந்தை...!


பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய சமயபுரம் ஆட்டுச்சந்தை...!
x

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சமயபுரம் ஆட்டுச் சந்தையில் இன்று ஆடுகள் விற்பனை களை கட்டியது.

மண்ணச்சநல்லூர்,

திருச்சி சமயபுரம் ஒத்தக்கடை பகுதியில் உள்ள ஆட்டுச்சந்தை தமிழகத்தில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தைகளில் ஒன்றாகும். சனிக்கிழமைதோறும் நடைபெறும் இந்த ஆட்டுச்சந்தையில் 15,000 முதல் 35,000 வரை ஆடுகள்வரை விற்பனையாகி வருகிறது. இந்த சந்தையில் சமயபுரத்தின் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் ஆடு வளர்ப்பவர்கள், ஆட்டு வியாபரிகள் பெருமளவில் கூடுவார்கள்.

பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று சமயபுரம் ஆட்டுச்சந்தையில் வழக்கத்தைவிட அதிக எண்ணிக்கையில் ஆடுகள் குவிந்தன. இதில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தஞ்சாவூர், நாமக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆட்டு வியாபாரிகள் தங்களது ஆடுகளை வாகனங்களில் ஏற்றி வந்திருந்தனர்.

அதிகாலை 4 மணி முதலே ஆடுகள் விற்பனை களைகட்டியது. இஸ்லாமியர்கள் நேரடியாக வந்து தங்களுக்கு பிடித்த ஆடுகளை தேர்ந்தெடுத்து வாங்குவதில் அதிக ஆர்வம் செலுத்தினர். இதனால் வழக்கத்தைவிட ஆடுகள் ரூ.7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை கூடுதல் விலைக்கு போயின. இதனால் 3 மணி நேரத்தில் 1 கோடிக்கு விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story