ஒவ்வொரு தரப்பினரின் பாதிப்பையும் ஆழ்ந்து உணர்ந்து நிவாரணத் தொகுப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


ஒவ்வொரு தரப்பினரின் பாதிப்பையும் ஆழ்ந்து உணர்ந்து நிவாரணத் தொகுப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

உட்கட்டமைப்புச் சீரமைப்புப் பணிகளுக்காக, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.280 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-

பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1000 கோடி ரூபாய் மதிப்பில் இன்று நிவாரணத் தொகுப்பை அறிவித்திருக்கிறேன். மீனவர்கள், உப்பளத் தொழிலாளர்கள், உழவர்கள், கால்நடை வளர்ப்போர், சிறுகுறு வணிகர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர், மாணவர்கள் என ஒவ்வொரு தரப்பினரின் பாதிப்பையும் ஆழ்ந்து உணர்ந்து இத்தொகுப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் ஏற்கனவே வழங்கப்பட்ட 6000 ரூபாய் நிவாரணத் தொகை; தென் மாவட்டங்களிலும் நேற்று முதல் 6000 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நிவாரணத் தொகை என 2000 கோடி ரூபாய்க்கும் மேல் மக்களுக்கு நிவாரணமாக வழங்கியுள்ளோம்.

உடனடி உட்கட்டமைப்புச் சீரமைப்புப் பணிகளுக்காக, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 280 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க மாநிலப் பேரிடர் நிதியிலிருந்தும், மாநில அரசு நிதியிலும் இருந்தே நமது திராவிடமாடல் அரசு இப்பணிகளைச் செய்து வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.



Next Story