முதலுதவி சிகிச்சைகள் குறித்து பொதுமக்கள் தெரிந்திருக்க வேண்டும்


முதலுதவி சிகிச்சைகள் குறித்து பொதுமக்கள் தெரிந்திருக்க வேண்டும்
x
தினத்தந்தி 18 Oct 2022 1:00 AM IST (Updated: 18 Oct 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

முதலுதவி சிகிச்சைகள் குறித்து பொதுமக்கள் தெரிந்திருக்க வேண்டும் என்று உலக விபத்து விழிப்புணர்வு நாள் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா கூறினார்.

சேலம்

முதலுதவி சிகிச்சைகள் குறித்து பொதுமக்கள் தெரிந்திருக்க வேண்டும் என்று உலக விபத்து விழிப்புணர்வு நாள் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா கூறினார்.

வருமான இழப்பு

உலக விபத்து விழிப்புணர்வு நாள் நிகழ்ச்சி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நடந்தது. அரசு ஆஸ்பத்திரி டீன் வள்ளி சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். கண்காணிப்பாளர் தனபாலன் முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

விபத்து ஏற்படும் போது உடலில் காயங்கள் ஏற்படுகின்றன. இதனால் வேலைக்கு செல்ல முடியாமல் வருமான இழப்பு ஏற்படுகிறது. சில நேரங்களில் உயிர் இழப்புகளும் ஏற்படுகிறது. இவ்வாறு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக விபத்து விழிப்புணர்வு நாள் கடைபிடிக்கப்படுகிறது.

முதல் உதவி சிகிச்சை

குறிப்பாக, விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முதல் உதவி சிகிச்சை அளித்து அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எனவே முதல் உதவி சிகிச்சை பற்றி பொதுமக்கள் தெரிந்திருக்க வேண்டும்.

விபத்து ஏற்படும்போது அவசர உதவி எண்ணான 108-க்கு முதல் தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக உலக விபத்து விழிப்புணர்வு நாளை முன்னிட்டு காயத்தடுப்பு மற்றும் மேலாண்மை உறுதி மொழி ஏற்கப்பட்டன. இதில் டாக்டர்கள், நர்சுகள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, பொது இடங்களில் விபத்துக்கள் ஏற்படும்போது மேற்கொள்ள வேண்டிய முதல் உதவி சிகிச்சை குறித்த ஒத்திகையை பார்வையிட்டார்.


Next Story