கிராமத்திற்குள் கரடி புகுந்ததால் பொதுமக்கள் அச்சம்

கிராமத்திற்குள் கரடி புகுந்ததால் பொதுமக்கள் அச்சம்
x

வாணியம்பாடி அருகே கிராமத்துக்குள் கரடி புகுந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர். கரடியை காட்டிற்குள் விரட்டியடிக்க வேண்டும் என வனத்துறைக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே கிராமத்துக்குள் கரடி புகுந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர். கரடியை காட்டிற்குள் விரட்டியடிக்க வேண்டும் என வனத்துறைக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரடி

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அம்பலூர், வடக்குப்பட்டு, இராமநாயக்கன்பேட்டை ஆகியவை மலையடிவாரத்தை ஒட்டி அமைந்துள்ள கிராமங்களாகும். இந்த பகுதிகளில் காட்டுயானைகள் அடிக்கடி விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.இந்த நிலையில் கரடி ஒன்று அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டு இருந்தது. இதை பொதுமக்கள் பலரும் பார்த்து அச்சத்துடன் அதனை விரட்டியுள்ளனர்.

ஆனால் கிராமப் பகுதிகளிலும், குடியிருப்புப் பகுதியிலும் அந்த கரடி சுற்றிக்கொண்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்து வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்

எனவே பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும், விவசாய பயிர்களுக்கும் பாதிப்புகள் ஏற்படும் முன்னர் வனத்துறையினரும், தீயணைப்பு துறையினரும் இணைந்து ஊருக்குள் நடமாடும் கரடியை விரைந்து கூண்டுகள் அமைத்து பிடிக்க வேண்டும் என கிராமப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story