பாதிக்கப்பட்டவரிடம் அதிக கட்டணம் வசூலித்த தனியார் ஆஸ்பத்திரி ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

பாதிக்கப்பட்டவரிடம் அதிக கட்டணம் வசூலித்த தனியார் ஆஸ்பத்திரி ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
x
தினத்தந்தி 25 March 2023 12:15 AM IST (Updated: 25 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவ சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த மருத்துவமனை, பாதிக்கப்பட்டவருக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

மருத்துவ சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த மருத்துவமனை, பாதிக்கப்பட்டவருக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு

குமரி மாவட்டம் களியாக்காவிளையை சேர்ந்தவர் சரசா பாய். இவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு சிகிச்சைக்காக சென்றார். இதற்காக அவர் ரூ.65 ஆயிரம் செலுத்தியுள்ளார். அதன் பின்னர் சிகிச்சைக்கான விவரங்கள் குறித்த தகவலை கேட்டுள்ளார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் சரியான விளக்கம் அளிக்கவில்லை.

அதிகமான கட்டணம் வசூலிக்கப்பட்டதாக உணர்ந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட நுகர்வோர் அதிர்ச்சியும், தாங்க முடியாத வேதனையும் அடைந்து உடனடியாக வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் அதன் பின்னரும் பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான சரசாபாய் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு

வழக்கை விசாரித்த குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் மருத்துவமனையின் சேவை குறைப்பாட்டை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட சரசாபாய்க்கு நஷ்ட ஈடு ரூ.25 ஆயிரம், ஏற்கனவே சிகிச்சைக்காக அதிகமாக செலவழிக்கப்பட்ட ரூ.16,800, மேலும் வழக்கு செலவு தொகை ரூ.5,000 ஆக மொத்தம் ரூ.46,800-ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Next Story