முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்; ராஜா எம்.எல்.ஏ. அறிக்கை


முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்; ராஜா எம்.எல்.ஏ. அறிக்கை
x
தினத்தந்தி 8 Dec 2022 12:15 AM IST (Updated: 8 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்துக்கு வருகை தரும் முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

தென்காசி

சங்கரன்கோவில்:

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை தரும் தமிழக முதல்-அமைச்சரை சிறப்பாக வரவேற்க வேண்டும். முதல்-அமைச்சரை வரவேற்க புளியங்குடி, வாசுதேவநல்லூர், சிவகிரி ஆகிய பகுதிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சிந்தாமணி விலக்கில் 60 அடி கொடி கம்பத்தில் முதல்-அமைச்சர் கொடி ஏற்ற உள்ளார். இதில் கழகத்தினர் மற்றும் இளைஞர் அணியினர் சீருடை அணிந்து சிறப்பாக வரவேற்க வேண்டும்.

தென்காசியில் கூட்டம் முடிந்து ராஜபாளையம் செல்லும் முதல்-அமைச்சருக்கு தென்காசி வடக்கு மாவட்ட பகுதியில் மக்கள் இருபுறமும் திரண்டு நின்று வரவேற்பு அளிக்க வேண்டும். முதல்-அமைச்சர் வரும் வழியில் 14 மேடைகள் அமைக்கப்பட்டு அங்கு 300-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கும் தமிழர்கள் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதில் மாநில, மாவட்ட, சங்கரன்கோவில் ஒன்றியம், வாசுதேவநல்லூர் ஒன்றியம், குருவிகுளம் ஒன்றியம், மேலநீலிதநல்லூர் ஒன்றியம், சங்கரன்கோவில் நகரம், புளியங்குடி நகரம் மற்றும் பேரூர் கழக, கிளைக்கழக, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சிக் கொடிகள், பதாகைகள் ஏந்தி திரளாக கலந்து கொண்டு விருதுநகர் மாவட்ட எல்லை வரை முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story