தங்கம், கட்டுமான பொருட்களின் விலை உயரும்


தங்கம், கட்டுமான பொருட்களின் விலை உயரும்
x

தங்கம், கட்டுமான பொருட்களின் விலை உயரும் என்று நல்லாண்டவர் கோவில் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டது.

திருச்சி

தங்கம், கட்டுமான பொருட்களின் விலை உயரும் என்று நல்லாண்டவர் கோவில் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டது.

பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி

மணப்பாறையை அடுத்த மான்பூண்டி நல்லாண்டவர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் நாளில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதே போல் இந்த ஆண்டும் மான்பூண்டி நல்லாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற பின் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. ஆற்காடு சீதாராமஹனுமான் பஞ்சாங்கத்தை முத்துக் கண்ணன் குருக்கள் வாசித்தார். அதன் படி இந்த ஆண்டு அனைத்து இடங்களிலும் நல்ல மழை பெய்யும் என்றும், அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும், முக்கிய தலைவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும், மத்திய, மாநில அரசுகளின் ஒற்றுமை குறையும், பல புதிய பாடத்திட்டங்கள் அமலுக்கு வரும், நாடு முழுவதும் ஒரே கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு மத்திய அரசின் மூலமாக எல்லா மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தப்படும்.

விலை உயரும்

தங்கம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்களின் விலை உயரும், பெட்ரோல், டீசல் எரிவாயு உள்ளிட்டவைகளின் விலை உயரும், ஆறுகள் மற்றும் நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும், விவசாயம் செழிக்கும், கட்டுமான பொருட்களின் விலை உயரும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் சொல்லப்பட்டது. பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சி முடிந்த பின்னர் கோவிலில் சாமி உட்சுற்று வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட மான்பூண்டி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு தேரில் வைக்கப்பட்ட பின் சாமி கோவிலில் உட்சுற்று உலா வந்தது. திரளானோர் கலந்து கொண்டனர். இதில் கோவில் பரம்பரை அரங்காவலர் முத்துவீர லெக்கைய நாயக்கர், செயல் அலுவலர் வைரவன், முன்னாள் மணியம் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story