பூக்கள் விலை கடும் உயர்வு


பூக்கள் விலை கடும் உயர்வு
x

பனிப்பொழிவால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

பனிப்பொழிவால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது.

மல்லிகை பூ சாகுபடி

அருப்புக்கோட்டை, செம்பட்டி, பாளையம்பட்டி, குருஞ்சாங்குளம், புலியூரான், தொட்டியான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மல்லிகை பூ அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு்ள்ளது. இங்கு விளையும் மல்லிகை பூக்கள் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், தமிழ்நாட்டில் பல பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூ விளைச்சல் குறைந்துள்ளது. விளைச்சல் குறைவானதால் பூக்களின் விலை அதிகரித்து உள்ளது.

விலை அதிகரிப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்பு மல்லிகைப்பூ கிலோ ரூ. 1,600 வரை விற்பனையானது. ஆனால் தற்போது ரூ.3 ஆயிரத்திற்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் முல்லைப்பூ ரூ.2 ஆயிரத்து 600 வரையிலும், பிச்சிப்பூ ரூ.2 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து பூ மார்க்கெட் மொத்த வியாபாரி திலகராஜ் கூறியதாவது:-

பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. மேலும் பொங்கல் பண்டிகை என்பதால் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு பூக்களை வாங்கி செல்கின்றனர். தேவை அதிகமாக இருப்பதாலும், வரத்து குறைந்ததாலும் பூக்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது. வரும் நாட்களில் பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story