திருச்சியில் பூக்கள் விலை கடும் உயர்வு
தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சியில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சியில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகை இன்று (திங்கட்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருச்சியில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தொடர் மழையின் காரணமாக பூக்களின் விலை சற்று குறைந்து இருந்த நிலையில் தீபாவளியையொட்டி நேற்று ஒரேநாளில் 3 மடங்கு விலை உயர்ந்தது. கிலோ ரூ.700-க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ நேற்று ரூ.1,500-க்கு விற்கப்பட்டது. கிலோ ரூ.600-க்கு விற்கப்பட்ட கனகாம்பரம் ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டது.
பூக்கள் விலை உயர்வு
கிலோ ரூ.1000-க்கு விற்கப்பட்ட முல்லைப்பூ ரூ.1,200-க்கும், சம்பங்கிப்பூ ரூ.80 முதல் ரூ.120-க்கும், ரோஜா ரூ.150 முதல் ரூ.200-க்கும், கிலோ ரூ.500-க்கு விற்கப்பட்ட ஜாதிப்பூ ரூ.800-க்கும் விற்பனையாகிறது.
இது குறித்து ஸ்ரீரங்கம் பூ மார்க்கெட் வியாபாரி ஒருவர் கூறுகையில், "கடந்த சில நாட்களாக மழையின் காரணமாக பூக்கள் விலை குறைந்து இருந்தது. தீபாவளிக்காக ஒரேநாளில் விலை உயர்ந்துள்ளது. இனி வரும் சில நாட்கள் பூக்களின் விலை மீண்டும் குறையும். அதன்பிறகு முகூர்த்தநாட்கள் வரும்போது மீண்டும் விலை உயர வாய்ப்பு இருக்கிறது" என்றார்.