பூக்கள் விலை இருமடங்கு உயர்வு


பூக்கள் விலை இருமடங்கு உயர்வு
x
தினத்தந்தி 23 Oct 2023 12:15 AM IST (Updated: 23 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆயுத பூஜையையொட்டி கடலூரில் பூக்கள் விலை இருமடங்கு உயர்ந்தது.

கடலூர்

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பூ மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு ஆயுத பூஜை மற்றும் விஜய தசமியையொட்டி நேற்று பூக்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் அனைத்து பூக்களின் விலையும் இருமடங்கு உயர்ந்து காணப்பட்டது. அதாவது நேற்று முன்தினம் ரூ.400-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ குண்டு மல்லி நேற்று 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் ரூ.240-க்கு விற்கப்பட்ட மல்லிகை பூ ரூ.460-க்கும், ரூ.160-க்கு விற்பனையான சம்பங்கி ரூ.360-க்கும், ரூ.120-க்கு விற்கப்பட்ட ரோஜா ரூ.280-க்கும் விற்பனையானது. மேலும் ரூ.120-க்கு விற்கப்பட்ட சாமந்தி ரூ.240-க்கும், ரூ.30-க்கு விற்கப்பட்ட கோழிக்கொண்டை ரூ.40-க்கும், ரூ.20-க்கு விற்பனையான கேந்தி ரூ.80-க்கும், ரூ.400-க்கு விற்கப்பட்ட கனகாம்பரம் ரூ.600-க்கும், வாடாமல்லி ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் இந்த விலை உயர்வையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு பூக்களை வாங்கி சென்றதை காண முடிந்தது.


Next Story