கிணற்றில் தவறி விழுந்தவர் உயிருடன் மீட்பு


கிணற்றில் தவறி விழுந்தவர் உயிருடன் மீட்பு
x

கிணற்றில் தவறி விழுந்தவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே விஜயரெகுநாதபட்டியில் கணபதி என்பவருக்கு சொந்தமான 40 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணறு உள்ளது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த துரையரசன் மகன் ராஜா (வயது 38) என்பவர் கிணற்றின் அருகில் நடந்து செல்லும் போது கிணற்றில் தவறி விழுந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணகுமார் தலைமையிலான மீட்பு குழுவினர் விரைந்து வந்து கிணற்றில் கயிறு கட்டி இறங்கி ராஜாவை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.


Next Story