வாலிபரை தாக்கியவர் கைது
வாலிபரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி அருகே உள்ள மேலச்செவல் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 25). இவரும், தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி நந்தவனம்காலனியை சேர்ந்த சுந்தரமூர்த்தி (30) என்பவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். அதனால் சுந்தரமூர்த்தி தொழில் தொடங்க வேண்டும் என்று கார்த்திகேயனிடமிருந்து ரூ.1½ லட்சத்தை கடனாக வாங்கி உள்ளார். அதில் ரூ.70 ஆயிரத்தை திருப்பி கொடுத்து விட்டதாகவும், மீதி பணத்தை கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கார்த்திகேயன் கீழபத்தமடை காமராஜர் நகரில் உள்ள சுந்தரமூர்த்தியின் குடோனுக்கு முன்பு வைத்து பணத்தை கேட்டதற்கு, அவரை அவதூறாக பேசி அரிவாளால் தாக்கி ரத்த காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கார்த்திகேயன் பத்தமடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுந்தரமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.