கொடி கம்பங்களை தாமாக முன்வந்து அகற்றிய கட்சியினர்


கொடி கம்பங்களை தாமாக முன்வந்து அகற்றிய கட்சியினர்
x

கொடி கம்பங்களை தாமாக முன்வந்து கட்சியினர் அகற்றினார்கள்.

கரூர்

குளித்தலையில் உள்ள பஸ் நிலையத்தை புனரமைப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வந்து செல்லும் வழியில் உள்ள காந்தி சிலையை வேறு இடத்தில் மாற்றி வைக்கவும், அச்சிலையை சுற்றியுள்ள பல்வேறு கட்சிகளின் கொடிக்கம்பங்கள் கல்வெட்டுகளை அகற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில், காந்தி சிலையை மாற்றி அமைக்க தி.மு.க.வை தவிர அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்திருந்தனர்.

இந்தநிலையில் காந்தி சிலையை சுற்றி வைக்கப்பட்டிருந்த தங்களது கட்சிக்கொடி மற்றும் கல்வெட்டுகளை தி.மு.க. உள்ளிட்ட ஒரு சில கட்சியினர் தாமாகவே முன்வந்து அகற்றி உள்ளனர்.


Next Story