எந்திரம் மீது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி விழுந்ததால் பரபரப்பு


எந்திரம் மீது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி விழுந்ததால் பரபரப்பு
x

சாலை அமைக்கும் பணிக்காக இடித்தபோது எந்திரத்தின் மீது மேல்நிலை நீர்த்தேக்க ெதாட்டி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்

சாலை அமைக்கும் பணிக்காக இடித்தபோது எந்திரத்தின் மீது மேல்நிலை நீர்த்தேக்க ெதாட்டி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை பணி

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள ஏனாதி ஊராட்சிக்கு உட்பட்ட பொந்தம்புளி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

இ்ந்த கிராமத்திற்கு செல்ல சரியான பாதை வசதி இல்லை. சாலை வசதி கேட்டு பெந்தம்புளி கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து ராமநாதபுரம் கலெக்டர் உத்தரவின்பேரில், புதிய சாலை அமைக்கும் பணி அங்கு நடைபெற்று வருகிறது.

எந்திரம் மீது விழுந்தது

நேற்று சித்திரக்குடி பகுதியில் சாலை அமைக்கும் பணி நடந்தபோது, அந்த பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற முடிவு செய்தனர். எந்திரம் மூலம் நீர்த்தேக்க தொட்டியை இடித்தபோது திடீரென நீர்த்தேக்க தொட்டி சாய்ந்து பொக்லைன் எந்திரம் மீது விழுந்தது. டிரைவர் எந்திரத்தில் இருந்து குதித்து ஓடியதால் உயிர் தப்பினார். மேலும் அந்த பகுதியில் பணியில் இருந்தவர்களும் சிதறி ஓடினர். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

முன்னதாக அந்த பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது வருவாய்த்துறை, போலீசாரிடம் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


Next Story