நிரம்பி வழியும் மருதாநதி அணை


நிரம்பி வழியும் மருதாநதி அணை
x

பட்டிவீரன்பட்டி அருகே கனமழைக்கு மருதாநதி அணை நிரம்பியது.

திண்டுக்கல்

பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையம் பகுதியில் மருதாநதி அணை அமைந்துள்ளது. அணையின் மொத்த உயரம் 74 அடி ஆகும். ஆனால் அணையின் பாதுகாப்பு கருதி 72 அடி வரையே தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கிய நிலையில் அணையின் நீர்மட்டம் 72 அடியை எட்டியது. இதையடுத்து உபரிநீர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் நிர்ணயிக்கப்பட்ட அளவை எட்டியதையறிந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Next Story