பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூடலூர்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மருத்துவ காப்பீடு
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க கூடலூர் வட்டக்கிளை 6-வது பேரவை கூட்டம் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்ட தலைவர் வர்கீஸ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க செயலாளர் சிவபெருமாள் கூட்டத்தை தொடங்கி வைத்தார். தீர்மானத்தை ஞானகுமாரி வாசித்தார். வட்ட செயலாளர் விஸ்ணுதாசன், பொருளாளர் ராமையா ஆகியோர் அறிக்கை சமர்ப்பித்தனர். பின்னர் தமிழக அரசை வழியுறுத்தி 18 தீர்மானங்களை நிர்வாகிகள் ஜான் சாமுவேல், சோமசுந்தரம், கண்ணையன் ஆகியோர் சமர்ப்பித்தனர்.
கூட்டத்தில் தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற சங்க தலைவர்களை அழைத்துப் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். 20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதி மக்களின் வசதிக்காக தமிழக அரசின் இலவச மருத்துவ காப்பீட்டை கேரள வயநாடு மாவட்டம் மேப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வழங்கியது போல், சுல்தான்பத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்க வேண்டும்.
மின் இணைப்பு
மருத்துவப்படியாக ரூ.ஆயிரம் வழங்க வேண்டும். செக்சன்-17 நிலங்களில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு மற்றும் வீட்டு மனை பட்டா உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் தலைவராக வர்கீஸ், துணை தலைவர்களாக எஸ்.எம்.வேலு, ஞானகுமாரி, செயலாளராக விஸ்ணுதாசன், இணை செயலாளர்களாக கோபால், சந்திரபோஸ், பொருளாளராக ராமையா ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.