பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நீலகிரி
குன்னூர்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க குன்னூர் வட்ட பேரவை கூட்டம் குன்னூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டக்கிளை தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க நிர்வாகி ராஜேந்திரன் வரவேற்றார். கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட சரண்டர் விடுப்பு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஊர்ப்புற நூலகர்கள், பண்ணை பணியாளர்களுக்கு உடனடியாக காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றிய கண்டோன்மெண்ட் ஊழியர்களுக்கு தமிழக அரசு அறிவித்த ஊக்கத்தொகை வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிைறவேற்றப்பட்டன. முடிவில் பொருளாளர் அமுதா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story