எருது விடும் விழா நடைபெறும் இடத்தை அதிகாரி ஆய்வு
நாட்டறம்பள்ளி அருகே எருது விடும் விழா நடைபெறும் இடத்தை அதிகாரி ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர்
நாட்டறம்பள்ளியை அடுத்த ஆத்தூர் குப்பம் ஊராட்சியில் வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) எருது விடும் திருவிழா நடைபெறுகிறது இதனையொட்டி எருது விடும் விழா நடைபெறும் இடத்தை நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் நேரில் சென்று பார்வையிட்டு மண்ணின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்தார். அவருடன் வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் விஸ்வநாதன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் ஆகியோர் சென்றிருந்தனர்.
அதன்பின் காளைகள் ஓடும் பாதை, அவை கட்டப்படும் இடம் ஆகியவற்றுக்கு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காளை விடுவதற்கான விதிமுறைகள் குறித்து விழா நடத்தும் குழுவினருக்கு அறிவுரை வழங்கினார்.
Related Tags :
Next Story