ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு பிரசார வாகனம்
வேதாரண்யத்தில் ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு பிரசார வாகனத்தை ஒன்றியத்குழு தலைவர் தொடங்கி வைத்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் ஒன்றியத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஊட்டச்சத்து மாத விழா வாகன பிரசார தொடக்க நிகழ்ச்சி நடந்தது. வேதாரண்யம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் இருந்து விழிப்புணர்வு வாகனத்தை ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ராஜு,பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர்கள் மணிமேகலை சிவகுரு பாண்டியன், தேவி செந்தில், சரவணன், வீர தங்கம் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் சித்ரா, வட்டார ஒருங்கிணைப்பாளர் கனிமொழி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பிரசார வாகனம் வேதாரண்யம் ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சிகளிலும் கிராம, கிராமமாக சென்று சுத்தம், சுகாதாரம், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அதனை சரி செய்யும் விதம் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.