நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது


நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 15 May 2023 12:15 AM IST (Updated: 15 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். அதிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் சற்று அதிகமாக இருக்கும். காலையில் முதல் மாலை வரை கோவிலுக்கு பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள்.

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். அவ்வாறு வந்த ஆண், பெண் பக்தர்கள் கோவில் வளாகத்தில் அரச மரத்தை சுற்றி அமைந்துள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபாடு செய்தனர்.

பின்னர் அங்கு மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகரை தரிசனம் செய்துவிட்டு மூலவரான நாகராஜரை வழிபட்டனர். பல பக்தர்கள் நாகராஜருக்கு பால், இளநீர், பன்னீர் உள்ளிட்டவற்றை அபிஷேகத்துக்காக கொடுத்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நாகராஜா கோவிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story