அரசு பஸ் கண்டக்டருக்கு அடி-உதை


அரசு பஸ் கண்டக்டருக்கு அடி-உதை
x

அரசு பஸ் கண்டக்டருக்கு அடி-உதை

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் கீழச்சரக்கல்விளையைச் சேர்ந்தவர் சிவபிரசன்னா (வயது 37). இவர் நாகர்கோவில் செட்டிகுளம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை மணக்குடியில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த அரசு பஸ்சில் கண்டக்டராக பணியில் இருந்தார். அப்போது அந்த பஸ் கீழபுத்தளம் அருகே வந்தபோது முன்னால் சென்ற மினி பஸ் ஒன்று, அரசு பஸ்சுக்கு வழிவிடாமல் பயணிகளை ஏற்றியும், சாலை விதிகளை கடைபிடிக்காமலும் சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அரசு பஸ் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் வந்த போது மினி பஸ் கண்டக்டரான நாகர்கோவிலை அடுத்த கீழபுத்தளத்தைச் சேர்ந்த பரத் (24), டிரைவரான பறக்கை கன்னங்குளம் பகுதியைச் சேர்ந்த அருண் (29) ஆகியோரை பார்த்து அரசு பஸ்சுக்கு ஏன் வழிவிடாமல் இடையூறு செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். உடனே அவர்கள் 2 பேரும் சேர்ந்து கண்டக்டர் சிவபிரசன்னாவை தகாத வார்த்தைகளால் பேசி அடித்து, உதைத்ததோடு கொலை மிரட்டலும் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிவபிரசன்னா கொடுத்த புகாரின்பேரில் மினி பஸ் கண்டக்டர் பரத், டிரைவர் அருண் ஆகியோர் மீது நாகர்கோவில் கோட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story