மோர்தானா அணை மீண்டும் நிரம்பியது


மோர்தானா அணை மீண்டும் நிரம்பியது
x

குடியாத்தத்தை அடுத்த மோர்தானா அணை மீண்டும் நிரம்பி 88 கன அடி தண்ணீர் வழிந்தோடுகிறது.

வேலூர்

குடியாத்தம்

குடியாத்தத்தை அடுத்த மோர்தானா அணை மீண்டும் நிரம்பி 88 கன அடி தண்ணீர் வழிந்தோடுகிறது.

மோர்தானா அணை

வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான குடியாத்தத்தை அடுத்த மோர்தானா அணை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெய்த தொடர் மழையால் நிரம்பி வழிந்தது. அதன்பின் பலத்த மழையால் பல ஆயிரம் கனஅடி தண்ணீர் அணையில் இருந்து வழிந்தோடியது. தொடர்ந்து பல மாதங்களாக மோர்தானா அணை நிரம்பி இருந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் 5 சென்டி மீட்டர் அளவு தண்ணீர் குறைந்து 11.45 மீட்டர் உயரம் தண்ணீர் இருந்தது. இந்தநிலையில் கடந்த மே மாதம் தொடர்ந்து சில நாட்கள் பெய்த மழையால் 11.50 மீட்டரை தாண்டி நீர் மட்டம் உயர்ந்து, ஒரு சென்டிமீட்டர் தண்ணீர் மே மாதம் 16-ந் தேதி முதல் சில நாட்கள் வழிந்தது. அதன் பின்னர் நீர் வழிவது குறைந்து விட்டது.

மீண்டும் நிரம்பியது

இந்த நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு தொடர்ந்து பெய்த மழையால் ஜூன் 6-ந் தேதி மீண்டும் அணை நிரம்பி சுமார் 7 கனஅடி தண்ணீர் வழிந்தோடியது. தற்போது கடந்த இரண்டு நாட்களாக மோர்தானா அணை பகுதியில் பலத்த மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி 58 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது.

இதனால் மோர்தனா அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 88 கனஅடி தண்ணீர் வழிந்தோடுகிறது. மே மற்றும் ஜூன் மாதங்களில் மோர்தானா அணை நிரம்பி வழிவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. மோர்தானா அணை நிரம்பி வினாடிக்கு 88 கனஅடி தண்ணீர் வழிந்தோடுவதை அறிந்த சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story