வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் சிறார்கள் ரகளை விவகாரம் - 12 பேர் மீது பாய்ந்த வழக்குப்பதிவு


வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் சிறார்கள் ரகளை விவகாரம் - 12 பேர் மீது பாய்ந்த வழக்குப்பதிவு
x

வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் சிறார்கள் ரகளை ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேலூர்,

வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து நேற்று 6 சிறார் கைதிகள் தப்பி ஓடியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதுகாப்பு இல்லத்தில் உள்ளவர்களை தாக்கிவிட்டு அங்குள்ள 6 சிறார்கள் தப்பியோடியதாகவும், இந்த தாக்குதலில் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இந்த சூழலில் அதே பாதுகாப்பு இல்லத்தில் உள்ள சிறார்கள் இன்று ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்குள்ள 14 சிறார்கள் மீது பாதுகாப்பு இல்ல கண்காணிப்பாளர் புகார் அளித்த நிலையில், சம்பந்தப்பட்ட பாதுகாப்பு இல்லத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் ரகளை ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக 12 சிறார் கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இல்ல பாதுகாப்பு கண்காணிப்பாளர் அளித்த புகாரில் 12 பேர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே வேலூர், அரசு பாதுகாப்பு இல்லத்தில் 6 சிறார் கைதிகள் தப்பியோடிய விவகாரம் தொடர்பாக மாவட்ட எஸ்.பி. 3 நாட்களில் பதில் அறிக்கை தாக்கல் செய்ய தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


Next Story