பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
மூலைக்கரைப்பட்டி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பிள்ளையார்குளத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 48). இவர் அங்குள்ள பெந்தகோஸ்தே சர்ச்சில் மத போதகராக உள்ளார். இவருடைய மனைவி அன்னபுஷ்பம் (45). அதே ஊரைச் சேர்ந்தவர் போவாஸ் (40) விவசாயி. ஜெகநாதனுக்கும், போவாசுக்கும் இடப்பிரச்சினை இருந்து வந்தது. வயலில் தண்ணீர் விடுவதிலும் பிரச்சினை இருந்து வந்தது.
இந்தநிலையில் நேற்று போவாஸ் பிரச்சினை குறித்து அன்னபுஷ்பத்தை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்து தட்டிக்கேட்ட ஜெகநாதனையும் மிரட்டி உள்ளார். இதுகுறித்து ஜெகநாதன் மூலைக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி போவாசை கைது செய்தார்.
Related Tags :
Next Story