கோவில் உண்டியலை திருடியவர் கைது
விக்கிரமசிங்கபுரம் அருகே கோவில் உண்டியலை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே மேல ஏர்மாள்புரம் முப்புடாதி அம்மன் கோவிலில் கடந்த மாதம் கொடை விழா நடந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை கோவிலில் பூஜை செய்வதற்காக முருகன் வந்துள்ளார். அப்போது கோவிலில் குடத்துடன் இருந்த உண்டியலை காணவில்லை. அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்த போது அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சுரேஷ் (வயது 25) என்பவர், குடத்துடன் உண்டியலை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுபற்றிய புகாரின் பேரில் விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுரேசை கைது செய்தனர்.
Related Tags :
Next Story