வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது
வேதாரண்யம் அருகே முன்விரோதத்தில் வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி கணக்கன்காடு பகுதியைச் சேர்ந்தவர் கமலநாதன் (வயது30). அதே ஊரைச் சேர்ந்த சக்திதாஸ் (32). இருவருக்கும் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று கமலநாதனுக்கும், சக்திதாசுக்கும் இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சக்திதாஸ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கமலநாதனை குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். இதில் காயமடைந்த அவர் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திதாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story