சிறுமியை திருமணம் செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது


சிறுமியை திருமணம் செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது
x

வந்தவாசி அருகே சிறுமியை திருமணம் செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசியை அடுத்த புன்னை கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 24)

இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள ஒரு கிராமத்துக்கு சென்றபோது, அந்த கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோவிலில் சிறுமிக்கும், பாக்கியராஜிக்கும் திருமணம் நடந்தது. இதையடுத்து அவர் சிறுமியை தன்வீட்டுக்கு அழைத்து சென்று குடும்பம் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறுமிக்கு வயிற்றுவலி ஏற்பட்டது.

இதையடுத்து அவரை வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து டாக்டர்கள் அளித்த தகவலின்பேரில் மகளிர் போலீசார் அங்கு சென்று சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து சிறுமி அளித்த புகாரின்பேரில் பாக்கியராஜ் மீது போக்சோ, குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.


Next Story