விவசாயியை தாக்கியவர் கைது
விவசாயியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி
அம்பை:
கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள ஜமீன்சிங்கம்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 60). விவசாயி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுப்பையா (45) என்பவரின் தந்தைக்கும் இடையே நெல் வியாபாரம் செய்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் ஜமீன்சிங்கம்பட்டி பெருங்கால் கீழ்ப்புறம் உள்ள கரையில் முருகன் நின்றபோது, அங்கு வந்த சுப்பையா அவரை அவதூறாக பேசி கம்பால் தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து முருகன் கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நாககுமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுப்பையாவை கைது செய்தார்.
Related Tags :
Next Story