வக்ரகாளியம்மன் கோவிலில் மகா தீபம் ஏற்றம்


வக்ரகாளியம்மன் கோவிலில் மகா தீபம் ஏற்றம்
x
தினத்தந்தி 3 Aug 2023 12:15 AM IST (Updated: 3 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

விழுப்புரம்

திண்டிவனம்,

திண்டிவனம் அருகே திருவக்கரையில் உள்ள பிரசித்தி பெற்ற வக்ரகாளியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் ஆடி மாத பவுர்ணமியை யொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்படி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு கோவிலின் மேல் பிரகாரத்தில் அமைந்துள்ள பீடத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது அங்கிருந்த திரளான பக்தர்கள் மகா தீபத்தை தரிசனம் செய்து, ஓம்காளி வக்ரகாளி, ஜோதி, ஜோதி, வக்ரகாளி ஜோதி, ஜோதியை பார்த்தால் பாவம் தீரும் என கோஷமிட்டனர். மகாதீபம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்திருந்தனர். திருவக்கரை மகா தீபத்தை யொட்டி விழுப்புரம், திண்டிவனம், புதுச்சேரி மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.


Next Story