டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு
ஆற்காடு அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் மதுபாட்டில்களை திருடிச்சென்றுள்ளனர்.
ஆற்காடு
ஆற்காடு அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் மதுபாட்டில்களை திருடிச்சென்றுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த லாடவரம் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு ஆற்காடு தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து டாஸ்மாக் கடையின் விற்பனையாளர் ஆற்காடு அடுத்த மாங்காடு பகுதியைச் சேர்ந்த ஏழுமலைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஏழுமலை கடையின் உள்ளே சென்று பார்த்த போது சுமார் 300 மதுபாட்டில்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.40 ஆயிரம் என கூறப்படுகிறது. இது குறித்து டாஸ்மாக் விற்பனையாளர் ஏழுமலை அளித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.