ஜப்பானியர்கள் வழிபாடு
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஜப்பானியர்கள் வழிபாடு
மயிலாடுதுறை
திருவெண்காடு:
திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நேற்று ஜப்பான் நாட்டை சேர்ந்த பாலகும்ப குருமணி டக்கா யோகி கோஷி தலைமையில் 40 ஜப்பானிய சீடர்கள் வந்தனர். இவர்கள் புதன் சன்னதிக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த யாக குண்டத்தில் நடைபெற்ற புதபரிகார ஹோமத்தில் பங்கேற்றனர். அவர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அப்போது கோவில் நிர்வாக அதிகாரி முருகன், வைத்தீஸ்வரன் கோவில் சேர்ந்த செந்தில் முருகன், ஜப்பானை சேர்ந்த தமிழ் மொழி பெயர்ப்பாளர் கோபால் பிள்ளை, பா.ஜ.க. பிரமுகர் துரை செழியன் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக பூம்புகார் அருகே உள்ள நாகநாதன் கோவில் கேது ஸ்தலம் மற்றும் வைத்தீஸ்வரன் கோவில் செவ்வாய் சன்னதி ஆகியவற்றிலும் அவர்கள் வழிபட்டனர்.
Related Tags :
Next Story