முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு
சூலூர் அருகே வீட்டில் குழி தோண்டியபோது முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தொல்லியல் துறை ஆய்வு செய்து வருகின்றனர்.
சூலூர்
சூலூர் அருகே வீட்டில் குழி தோண்டியபோது முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தொல்லியல் துறை ஆய்வு செய்து வருகின்றனர்.
மூடப்பட்டு இருந்தது
சூலூர் அருகே முத்துக வுண்டன்புதூர் ஊராட்சி காளியாபுரத்தை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவர் வீட்டில் செப்டிக் டேங்க் கட்ட நேற்று முன்தினம் குழி தோண்டியுள்ளார். அப்போது பூமிக்குள் ஒரு மர்ம பொருள் இருப்பது தெரிய வந்துள்ளது. இது பற்றிய தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கிராம நிர்வாக அதிகாரி முருகேசன் தொல்லியல் துறையினருக்கு தகவல் அளித்தார். அவர்கள் அங்கு வந்து பார்த்தனர். அப்போது குழி தோண்டிய இடத்தில் பழங்கால மண்பானை இருந்தது. அந்த பானை ஒரு பலகையால் மூடப்பட்டிருந்தது.
முதுமக்கள் தாழி
அதை திறந்து பார்த்த போது, அந்த பானை முதுமக்கள் தாழி என்று தெரியந்தது. அதற்குள் ஒருசில எலும்புகள் மட்டுதே இருந்தன.மேலும் அதனுடன் அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட கலைநயம் மிக்க ஒரு சில பொருட்களும் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அறிந்த கோவை மாவட்ட தொல்லியல்துறை ஆய்வாளர் ஜெயபிரபா அங்கு வந்து ஆய்வு செய்தார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தற்போது தோண்டி எடுக்கப்படும் முதுமக்கள் தாழி முழுமையாக கிடைக்கப்பெற்றால் அது மியூசியத்தில் கொண்டு போய் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.
முத்து கவுண்டம்புதூர் ஊராட்சி காளியாபுரம் பகுதியில் முதுமக்கள் தாழி கிடைத்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.