காலாவதியான பரனூர் சுங்கச்சாவடியை மூட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மறியல்


காலாவதியான பரனூர் சுங்கச்சாவடியை மூட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மறியல்
x

காலாவதியான பரனூர் சுங்கச்சாவடியை மூட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு நகருக்கு அருகில் அமைந்துள்ள பரனூர் சுங்கச்சாவடிக்கான அனுமதி கடந்த 2019-ம் ஆண்டுடன் காலவதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் மத்திய தணிக்கை அறிக்கையில் பரனூர் சுங்கச்சாவடி சட்டத்தை மீறி கூடுதலாக ரூ.28 கோடி வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. எனவே, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் பரனூர் சுங்கச்சாவடியை அகற்றிவிடவும், சட்டவிரோத கொள்ளையை தடுத்து நிறுத்தவும் நேரடி நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில தலைவர் கார்த்திக் தலைமையில் பரனூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு 50-க்கும் மேற்பட்டவர்கள மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சரவணதமிழன், மாநிலகுழு உறுப்பினர் ஜானகிதேவி, தென்சென்னை மாவட்ட தலைவர் சுரேஷ், செயலாளர் சந்துரு, செங்கல்பட்டு மாவட்ட தலைவர் சதீஷ், மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் தலைமையிலான போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.


Next Story