'இந்தியா' கூட்டணிக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது: திருமாவளவன் பேட்டி


இந்தியா கூட்டணிக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது: திருமாவளவன் பேட்டி
x
தினத்தந்தி 19 April 2024 11:20 AM IST (Updated: 19 April 2024 11:35 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40 இடங்களில் வெற்றிபெறும் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

அரியலூர்,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள், நடிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் காலையில் இருந்தே தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரியலூர் மாவட்டம் அங்கனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது வாக்கினை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;

"நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. மக்களின் பக்கம் இந்தியா கூட்டணி நிற்கிறது. அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்க வாக்களியுங்கள் என்று இந்தியா கூட்டணி கூறியுள்ளது. நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40 இடங்களில் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தியா கூட்டணியின் ஆட்சி மலரும்." இவ்வாறு அவர் பேசினார்.


Next Story