4 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் - 2-வது நாளாக உடலை வாங்க மறுத்து போராட்டம்


4 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் - 2-வது நாளாக உடலை வாங்க மறுத்து போராட்டம்
x
தினத்தந்தி 5 Sept 2023 7:29 AM IST (Updated: 5 Sept 2023 11:13 AM IST)
t-max-icont-min-icon

குற்றவாளிகளை தொடர்ந்து தேடி வருகிறோம் என்று திருப்பூர் மாவட்ட எஸ்.பி. சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

பல்லடம்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வழியில் அமர்ந்து மது குடித்ததை தட்டிக்கேட்டபோது ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திருச்சி வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், பல்லடத்தில் 4 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்தவர்கள்இன் உடலை வாங்க மறுத்து 2வது நாளாக உறவினர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடல்களை வாங்க போவதில்லை என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் பல்லடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய குற்றவாளியான வெங்கடேசனை பிடிக்க தனிப்படை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். குற்றவாளிகளை தொடர்ந்து தேடி வருகிறோம் என்று திருப்பூர் மாவட்ட எஸ்.பி. சாமிநாதன் தெரிவித்துள்ளார்.


Next Story