அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த பிறகும் மின் கட்டண உயர்வை அமல்படுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது - டி.டி.வி.தினகரன்


அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த பிறகும் மின் கட்டண உயர்வை அமல்படுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது - டி.டி.வி.தினகரன்
x

அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த பிறகும் மின் கட்டண உயர்வை அமல்படுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் இன்று முதல் மின்கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் மின்கட்டண உயர்வுக்கு டி.டி.வி. தினகரன் கண்டன்ம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த பிறகும், தமிழகத்தில் மின் கட்டண உயர்வை அமல்படுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

பெயரளவுக்கு கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்திவிட்டு, அதில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளுக்கு எந்தவித முக்கியத்துவமும் கொடுக்காமல் இந்த கட்டண உயர்வு இன்று முதல் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குடும்பங்களுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படும். வீட்டு வாடகை, கடை வாடகை போன்றவை உயர்வதற்கும், ஏற்கனவே நெருக்கடியிலிருக்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மேலும் நெருக்கடிக்கு ஆளாவதற்குமே மின் கட்டண உயர்வு வழிவகுக்கும்.

மனசாட்சியோடு யோசித்துப் பார்த்திருந்தால் தி.மு.க அரசுக்கு இதெல்லாம் புரிந்திருக்கும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story