வெளிநாட்டில் துன்புறுத்தலுக்கு ஆளாகி வரும் கணவரை மீட்டு தரவேண்டும்


வெளிநாட்டில் துன்புறுத்தலுக்கு ஆளாகி வரும்  கணவரை மீட்டு தரவேண்டும்
x

வெளிநாட்டில் துன்புறுத்தலுக்கு ஆளாகி வரும் கணவரை மீட்டு தரவேண்டும்

திருவாரூர்

வெளிநாட்டில் துன்புறுத்தலுக்கு ஆளாகி வரும் கணவரை மீட்டு தர வேண்டும் என கலெக்டரிடம் பெண் கோரிக்கை மனு அளித்தார்.

கோரிக்கை மனு

திருவாரூர் விஜயபுரம் பகுதியை சேர்ந்த விஜயா என்பவர் தனது 2 குழந்தைகளுடன் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீயிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

எனது கணவர் திருவாரூரில் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். அதில் போதிய வருமானம் இல்லாததால் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல முடிவெடுத்து கடந்த மாதம் 28-ந்தேதி மலேசியா சென்றார். அங்கு சென்ற பின்னர் சம்பளம் குறைவாகவும், விசாவிற்கு பணம் பிடித்து கொள்வோம் என்று கூறியுள்ளனர். மேலும் காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை மூட்டை தூக்குவது உள்ளிட்ட வேலைகளை வழங்குகின்றனர்.

கணவரை மீட்டு தர வேண்டும்

உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையிலும் வேலை வாங்குகின்றனர். ஏதேனும் கேட்டால் தாக்குதலும், செல்போனையும் பறித்து விடுகின்றனர். எனது கணவர் ஏற்கனவே கை, கால் வலி பிரச்சினையால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவரை அங்கு கடுமையான வேலை வாங்கி துன்புறுத்தி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து எனது கணவரை மீட்டு தரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story