மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் கணவர் தற்ெகாலை


மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் கணவர் தற்ெகாலை
x

மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் கணவர் தற்ெகாலை செய்து கொண்டார்.

விருதுநகர்

தாயில்பட்டி

ஏழாயிரம் பண்ணை தெற்கு தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 43). இவரது மனைவி தவச்செல்வி (40). குடும்ப பிரச்சினை காரணமாக இவர்கள் இருவரும் தனி, தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. மனைவி பிரிந்து சென்றதால் மகேந்திரன் மனவேதனையுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மகேந்திரன் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக விருதுநகர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதையடுத்து அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இதுகுறித்து ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story